undefined

பரபரப்பு... நடிகர் விஜய்  பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  பட்டாகத்தியுடன் தவெக நிர்வாகிகள் மோதல்... 6 பேர் படுகாயம்!  

 


 
தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஜூன் 22ம் தேதி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை தவெக தொண்டர்களும் ரசிகர்களும் வெகு விமர்சையாக பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.  அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூர் பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது  திடீரென  நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

நகரச் செயலாளர் சசிகுமாருக்கும் கிளைச் தலைவர் நாகராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பட்டாக்கத்தியுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டனர். இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்திருக்கும்  நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது