40 வயதுக்குள் 25% இளைஞர்களுக்கு மாரடைப்பு… மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் மாரடைப்புக்குள்ளாகும் நபர்களில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள் உள்ளவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் வயதினரிடையே இதய பாதிப்புகள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் 77 இடங்களில் பொதுமக்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சிகள் வழங்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இந்த முகாம்களில் 770-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் சிபிஆர் முறையில் உயிரை எவ்வாறு காப்பாற்றலாம் என்பது செய்முறை விளக்கமாக கற்றுத் தரப்பட்டது.
இதுகுறித்து அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சேனாதி நந்தா கிஷோர் கூறுகையில், இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார். பொது இடங்களில் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் அருகில் இருப்பவர்களே முதலுதவி செய்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும், அதற்காகவே இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!