undefined

பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!  தெருநாய்கள் கடித்து சிறுவன் பலி !! தொடரும் சோகம்!!

 

5 வயது சிறுவனை தெருநாய்கள் கூட்டமாக கடித்து கொன்ற பதறவைக்கும் துயர சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் சிறுவன் பிரதீப் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். சிறுவன், தனது தந்தையுடன் காவலாளியாக பணிப்புரியும் இடத்துக்கு நடந்து சென்றுள்ளார். 

அந்நேரத்தில், சிறுவன் மட்டும் தனியாக தெருவில் நடந்துசென்றுள்ளான். அங்கு திடீரென 3 தெருநாய்கள் சிறுவனைச் சூழ்ந்து குரைத்துள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடுயதால், நாய்கள் சிறுவனைத் துரத்தி கீழே தள்ளி அவனைச் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்குகின்றன. 

ஒவ்வொரு முறையும் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்று சிறுவன் எழுந்த போது எல்லாம் நாய்கள் அவனைத் தாக்கி கீழே தள்ளி கடிக்கின்றன. படுகாயமடைந்த சிறுவனை சிறிது நேரத்துக்கு பிறகு அப்பகுதியினர் மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவன் உயிழந்துள்ளான்.

இந்த துயர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதயத்தை பதறவைக்கும் இந்தசம்பவம் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் கவனம் கொள்ளச்செய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?