undefined

எங்க அம்மாவை மீட்டுத் தாங்க!!  ஆக்சிஜன் சிலிண்டரில் சுவாசிக்கும் தாயுடன் 4 மகள்கள் பாசப்போராட்டம்!! 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சமத்துவபுர குடியிருப்பில் மயில் முருகன்(38) - சிவகலா(36) தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுகாசினி, அனுகாசினி, தேவி ப்ரியா, ரியாசினி என 4 மகள்கள் உள்ளனர்.மயில் முருகன், டீக்கடையில் தினக் கூலியாக வேலை பார்த்து குடும்பத்தை கவனித்துவந்தார். இந்நிலையில், சிவகலாவிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு  சிவகலாவின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது.

பின்னர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்த போது சிவகலாவிற்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஆகியவைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் காரணமாக மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்டது. இதனால் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி என பல்வேறு இடங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் பலன்கிடைக்கவில்லை.

இதனால் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து கொண்டு அதில் இருந்து வெளியேறும் ஆக்சிஜனை சுவாசித்தபடி தனது உயிரை கையில் பிடித்து கொண்டு சிவகலா தற்போது உயிர் வாழ்ந்து வருகின்றார்.

சிவகலாவிற்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க ரூ.1500 தேவைப்படுவதால் தினக் கூலி தொழிலாளியான மயில் முருகன் பண வசதியின்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க அவ்வப்போது உதவிசெய்து வருகின்றனர்.

மருத்துவ தேவைக்கான பணம் ஒருபக்கம் இருக்க, தனது 4 மகளையும் படிக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறார். எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் துணையுடன் போராடும், சிவகலாவுக்கு உரியசிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவவேண்டும் என கணவர் மயில் முருகனும், அவரது 4 மகள்களும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!