6 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!
தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் சூறாவளிக் காற்று 35–45 கிலோமீட்டர் வேகத்துடன் வீசும்; இடையிடையே 55 கிலோமீட்டர் வேகமும் செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!