நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலெர்ட்!
குமரிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவும் இந்த தாழ்வுமண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி–அந்தமான் கடல் பகுதிகளில் உருவான தாழ்வு இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதும் கவலைக்குரியதாகும்.
மேலும் அடுத்த 48 மணி நேரங்களில் இது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் நாளை (நவம்பர் 29) மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் அடுத்த 2 நாட்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!