சென்னைக்கு கனமழை அலெர்ட்... சீக்கிரமா வீட்டுக்கு போங்க!
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் தென்காசியின் ஓரிரு இடங்களில் கனமழை அதிகம் சேர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 முதல் 11 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியான லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தகவல். சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். நகரின் வெப்பநிலை அதிகபட்சம் 29-30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 டிகிரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கேரளம், கர்நாடகா கடலோரம், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!