சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக – புதுவை கடலோரப் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவிழந்து இன்று காலை மேலும் பலவீனமானதாக மாறியுள்ளது.
இன்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளுடன் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும் மேகமூட்டம் நீடிக்கும் நிலையில், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை தொடரக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!