14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் மத்தியகிழக்கு அரபிக்கடலில் மே 21ம் தேதி வாக்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக மே 22ம் தேதி அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இந்நிலையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, தி.மலை, வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!