புத்தாண்டில் கனமழை சாத்தியம்… பின்னர் வறண்ட வானிலை!
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் தமிழகத்தின் ஒருசில இடங்களில், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 2-ம் தேதி தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை தொடரலாம். ஜனவரி 3-ம் தேதி தென் தமிழகத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பின், ஜனவரி 4 முதல் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலையைப் பொருத்தவரை, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கலாம். ஜனவரி 2 முதல் 4 வரை சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!