undefined

ஜனவரி 25 இந்த  மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடரும். 25-ம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26-ம் தேதி மீண்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் சில இடங்களில் குளிர் அதிகரிக்கலாம். நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!