10 மாவட்டங்களில் மழை வெளுக்கும்... இன்று எங்கெல்லாம் விடுமுறை?!

 

வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 'டிட்வா' புயல் கரையை கடந்த பின்னரும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று  காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட தமிழகம்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் தென் தமிழகம்: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி. ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை மற்றும் உள்ளூர் திருவிழா காரணமாக இன்று சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கந்தூரி விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால்: 'டிட்வா' புயல் காரணமாகத் தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!