கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதியினர் உட்பட 3 பேர் பலி!
கடலூர் மாவட்டம், சாத்தமங்கலம் அருகே இன்று காலை பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் உட்பட மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை (நவம்பர் 23, 2025) கடலூர் மாவட்டம், ஒரத்தூர் காவல்நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், சாலையோரம் நின்றிருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து, மின் கம்பி மீது விழுந்தது.
மரம் விழுந்ததன் விளைவாக, மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது, அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சாத்தமங்கலத்தைச் சேர்ந்த சூசை (70), அவரது மனைவி பிலோன் மேரி (60), மற்றும் வனதாஸ் மேரி (70) ஆகிய மூன்று பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மீட்புப் படையினரும் போலீசாரும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்ட மீட்புப் படையினர், அவற்றை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை காலங்களில் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!