கனமழை கொடூரம்... ஒரே இரவில் 38 ஆடுகள் பலி!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரக்கோட்டை பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி யேசு (48), மனைவியுடன் சேர்ந்து 300 ஆடுகள், 25 மாடுகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். இயற்கை உரத்திற்காக தினமும் இரவு வேளையில் ஆடு–மாடுகளை விவசாய நிலங்களில் மேய்த்து அடைக்கும் பழக்கம் இருந்தது. அதன்படி பின்னையூர் கீழக்கோட்டை பகுதியிலுள்ள ஒருபட்டாவில் கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக முன்தின இரவு மிக கனமழை கொட்டித் தீர்ந்தது. அடுத்த நாள் காலை நிலத்திற்கு சென்ற யேசு, 38 ஆடுகள் குளிரில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அவசரமாக அணுகி ஆய்வு மேற்கொண்டனர். அரசு கால்நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடியிருந்த 10–க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். கூலித் தொழிலாளி ஒருவரின் வாழ்வாதாரமாக இருந்த ஆடுகள் இழந்ததால், அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் வலுத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!