டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை... முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!
டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்குக்கு நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் நவம்பர் 28 முதல் 30 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல், நெல் மூட்டைகளைக் காப்பாற்ற நேரடி கொள்முதல் மையங்களில் உடனடி நகர்வு செய்யுதல், கூடுதல் மின்கம்பங்கள், மாற்றிகள் தயார்படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டன.
கனமழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் மூன்று அணிகள் வேளாங்கன்னியில், இரண்டு அணிகள் கடலூரில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி இன்று முதல் விழுப்புரத்தில் பணியில் ஈடுபட உள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால மையங்கள் மூலம் நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!