இன்றும் நாளையும் மிதமான மழை, பனிமூட்டம்… !
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் வானிலை காணப்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஜனவரி 17 முதல் 19 வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் உள் மாவட்ட பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கலாம். இதனால் காலை நேர போக்குவரத்தில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!