வட இந்தியாவில் கடும் உறைபனி... மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸ்... மேலும் பனிப்பொழிவு அதிகரிக்கும் என எச்சரிக்கை!
இந்தியாவின் வட மாநிலங்கள் வழக்கத்தைவிட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. பெரும்பாலான வட மாநிலங்களில் அதிகக் குளிர் நிலவும் நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர்: காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இதனால் ஷோபியன் போன்ற தெற்குக் காஷ்மீர் பகுதிகள் முழுவதும் உறைந்த பகுதியாக மாறியுள்ளன. இமாச்சலப் பிரதேசம்: இங்குள்ள பல நீர்நிலைகள் மற்றும் அருவிகள் கடுங்குளிரால் உறைந்துபோய்ப் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களில் வெப்பநிலை படிப்படியாக மேலும் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி நிலவுவதால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகப் பயணிக்கின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு, காலை 10 மணிக்கு மேல் பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாக வெளியில் பயணிப்பதைத் தவிர்க்கவும், உடலைச் சூடாக வைத்துக்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடும் பனிப்பொழிவால் வட மாநிலங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!