பதைபதைக்கும் வீடியோ... நேபாளத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து!

 

 


கிழக்கு நேபாளத்தின் மலைப்பாங்கான கோடாங் மாவட்டத்தில், இன்று காலை ஏர் டைனஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.இன்று காலை சுமார் 11:51 மணியளவில் கோடாங் மாவட்டத்தின் கெபிலாசுகாதி கிராமப்புற நகராட்சியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஏர் டைனஸ்டி நிறுவனத்தின் 9N-AFQ என்ற பதிவு எண் கொண்ட ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது.காத்மாண்டுவிலிருந்து ஐந்து பயணிகளுடன் கிளம்பிய இந்த ஹெலிகாப்டர், தரையிறங்கும் இறுதித் தருணத்தில் நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டரில் இருந்த 5 பயணிகளில், காஜி பகதூர் ராய் (74) என்ற முதியவருக்கு மட்டும் கால் மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர் உடனடியாக மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விமானி சபின் தப்பா மற்றும் பிற 4 பயணிகள் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாகத் தப்பினர்.

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முதற்கட்ட விசாரணையின்படி தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று அல்லது ஹெலிகாப்டர் இறக்கைகளால் கிளம்பிய அதிகப்படியான புழுதி காரணமாகப் பார்வை மறைக்கப்பட்டு (Brownout condition), விமானி கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!