நேருக்கு நேர் மோதிய அதிவேக ரயில்கள்… 39 பேர் பலி!
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் இருந்து மாட்ரிட் நோக்கி அதிவேக ரயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 300 பயணிகள் பயணம் செய்தனர். அதே நேரத்தில் மாட்ரிட்டில் இருந்து ஹியூல்வா நகருக்கு மற்றொரு ரயில் 200 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
இரவு 7.45 மணியளவில் கர்டோபா பகுதியில் விபத்து நிகழ்ந்தது. மாட்ரிட் நோக்கிச் சென்ற ரயிலின் கடைசி பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. பின்னர் எதிரில் வந்த ரயில் மீது மோதியதால் இரு ரயில்களின் பல பெட்டிகள் கவிழ்ந்தன.
இந்த கோர விபத்தில் 39 பயணிகள் உயிரிழந்தனர். 73 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கர் புயன்டி தெரிவித்தார். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!