நாளை தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நாளை (டிசம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த இரண்டு நாட்களாக மக்களின் பக்தியை அவமதித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி இரண்டு முறை உத்தரவிட்டும், காவல் துறை மூலம் தீபம் ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தினார்கள். மதச்சார்பற்ற அரசாக இருந்தால், தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு இந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நாளை டிசம்பர் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்குத் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!