undefined

வரலாற்று சாதனை... 7% பொருளாதார வளர்ச்சி... 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9-வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. வழக்கம் போல இம்முறையும் 'டேப்லெட்' மூலம் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை அவர் வாசித்தார்.  பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், கடந்த 12 ஆண்டுகால மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 7 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உற்பத்தித் துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் மீதான அந்நிய முதலீடுகள் மற்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்த நிதி அமைச்சர், பட்ஜெட் நகலை அவரிடம் சமர்ப்பித்தார். அதன் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்குப் ஒப்புதல் பெறப்பட்டது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சூழலில், இந்த பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!