200% அதிகரித்த எச்.ஐ.வி. ... பாகிஸ்தானை நடுங்க விட்ட அதிர்ச்சி தகவல்... WHO எச்சரிக்கை!
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, பாகிஸ்தானில் எச்.ஐ.வி. தொற்று வேகமாக வளர்ந்து வருவதாக எச்சரிக்கிறது. கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிகவும் வேகமாக பரவி வரும் எச்.ஐ.வி. தொற்றுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2010-ல் 16,000 இருந்த புதிய தொற்றுகள், 2024-ல் 48,000 ஆக உயர்ந்து 200% அதிகரித்துள்ளன.
பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள், இரத்த மேலாண்மையில் உள்ள குறைபாடுகள், பாதுகாப்பற்ற பாலியல் உறவு ஆகியவை தொற்றின் முக்கிய காரணங்களாக WHO சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது சுமார் 3.5 லட்சம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கிறார்கள். இவர்களில் 80% பேர் தங்களுக்கு தொற்று இருப்பதை அறியாதவர்களென கூறப்படுகிறது. குழந்தைகளில் புதிய தொற்றுகள் அதிகரித்துள்ளதும் கவலைக்குரியது — 2010-ல் 530 இருந்தது, 2023-ல் 1,800 ஆக உயர்ந்துள்ளது.
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்க சிகிச்சை மிக அவசியம். எனினும், சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களில் வெறும் 14% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல், எச்.ஐ.வி.யுடன் வாழும் 0–14 வயது குழந்தைகளில் 38% குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகின்றது. எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடெங்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று WHO வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!