காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு காதலிக்க 6 நாட்கள் விடுமுறை... சீனாவில் விநோதம்!
சீனாவில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், இளைஞர்களிடையே திருமணத்தை ஊக்குவிக்கவும் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒரு வினோதமான அதிரடி முடிவை எடுத்துள்ளன. "பூக்களைப் பாருங்கள்.. காதலியுங்கள்" என்ற அழகான தீமில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாணவர்களுக்கு 'வசந்த கால விடுமுறை' அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் படிப்பு மற்றும் வேலைப் பளுவில் மூழ்கிக் கிடக்கும் சீன இளைஞர்களைப் பரஸ்பரம் ஒருவரையொருவர் சந்தித்து உரையாடவும், புதிய உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் தூண்டும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பறைகளைத் தாண்டி வெளி உலகிற்குச் சென்று இயற்கையை ரசிக்கவும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரத்தைச் செலவிடவும் இந்த 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கையில் நுழைய முன்வருவார்கள் எனப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பெரிதும் நம்புகின்றன.
சீனாவின் இந்தத் திடீர் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "படிப்பு மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்க அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏப்ரல் தொடக்கத்தில் மலரும் வசந்த கால மலர்களை ரசிப்பதுடன், மாணவர்களின் மனதிலும் காதல் மலர வேண்டும் என்பதே இந்த விடுமுறையின் முக்கிய நோக்கமாகும். உலக நாடுகளே வியக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, சீனாவின் மக்கள்தொகை நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!