undefined

ஜன.28ல் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலகப்புகழ் பெற்ற ராஜகோபாலசாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 28-ம் தேதி மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகவும், விழாவைக் கொண்டாடும் வகையிலும் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக வீற்றிருக்கும் ராஜகோபாலசாமி கோவிலில், கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய, கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருப்பணிகள் தொடங்கின. சுமார் 16 கோடி ரூபாய் செலவில், ராஜகோபுரம் உள்ளிட்ட 16 கோபுரங்கள், 18 விமானங்கள் மற்றும் 24 சன்னதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, தற்போது வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.

இந்தக் குடமுழுக்கையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் மற்றும் கருங்கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவுவாயிலில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கருங்கல் யானைச் சிற்பங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால், தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 28 (புதன்கிழமை): திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் 07.02.2026 (சனிக்கிழமை) அன்று மாவட்டம் முழுவதும் வேலை நாளாகச் செயல்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை இணைந்து குடிநீர், தற்காலிகக் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துள்ளன. 16 கோபுரக் கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுவதைக் காண வசதியாகச் சிறப்புச் சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!