இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை... அயோத்தியில் ராமநவமி கொண்டாட்டம் ஆராவாரம்!

 

இன்று நாடு முழுவதும் ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராம நவமி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து இந்த வருடம் ராம நவமிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்தே அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், அனைவரும் நிம்மதியாகத் தரிசனம் செய்யவும் ஏதுவாக, அயோத்தி ராமர் கோயில் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3:30 மணிக்குத் தொடங்கும் தரிசனம், நள்ளிரவு வரை இடைவிடாமல் தொடரும். 

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அயோத்தி நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அயோத்தி ராமர் கோயிலில் புகழ்பெற்ற 'சூர்ய திலக்' நிகழ்வு நண்பகலில் நடைபெறவுள்ளது. சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் இந்த அதிசய நிகழ்வைக் காணப் பக்தர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடைகள் மற்றும் மருத்துவ வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!