பிரபல நடிகர் மரண வழக்கில் திருப்பம்... போதைப் பொருள் விற்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை!
பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரணத்திற்கு காரணமான போதைப்பொருளை விநியோகம் செய்த புகாரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்வீன் சங்காவிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் மேத்யூ பெர்ரி உயிரிழந்த நிலையில், அவரது உடலில் அளவுக்கு அதிகமான 'கெட்டமைன்' போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸின் "கெட்டமைன் ராணி" என்று அழைக்கப்படும் ஜஸ்வீன் சங்கா முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டார்.
நீதிமன்றத்தில் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்த ஜஸ்வீன் சங்கா, "இவை தவறுகள் அல்ல, பயங்கரமான முடிவுகள்; பலரது வாழ்க்கையைச் சிதைத்துவிட்டேன்" என உருக்கமாகக் கூறினார். மேத்யூ பெர்ரியின் குடும்பத்தினர் இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நீதிபதி ஷெரிலின் பீஸ் கார்னெட் இந்த 15 ஆண்டு கால சிறைத் தண்டனையை வழங்கினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் ஏற்கனவே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜஸ்வீன் சங்காவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!