undefined

வறுமையிலும் நேர்மை... மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 20 சவரன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

 

திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது.  மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளைத் தவறவிட்ட தம்பதியினருக்கு, ஒரு தூய்மைப் பணியாளரின் நேர்மை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதி, மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ள தங்களது மகள் அட்சயா தேவியின் திருமணத்திற்காக 20 சவரன் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை வாங்கியிருந்தனர். இவற்றைத் திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வைக்க எண்ணி, கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவாரூர் வந்தனர். இன்று காலை ஆட்டோவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நகைப் பை சாலையில் தவறி விழுந்துள்ளது.

நகைப் பையைத் தொலைத்த தம்பதியினர் நிலைகுலைந்து போயிருந்த நிலையில், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த துரை என்பவர் சாலையில் கிடந்த அந்தப் பையைக் கண்டெடுத்துள்ளார். பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பெரும் மதிப்பிலான நகைகளைக் கண்டு திகைத்த அவர், மனதளவில் ஒரு நிமிடம் கூடத் தயங்காமல் உடனடியாக நகராட்சி அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த தம்பதியினரிடம், காவல்துறையினர் முன்னிலையில் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. "எங்கள் மகளின் எதிர்காலமே அந்தப் பையில்தான் இருந்தது" என்று கூறி முத்துலட்சுமி கண்ணீர் மல்கத் துரைக்கு நன்றி தெரிவித்தார். நகைகள் கிடைத்த மகிழ்ச்சியில் தனது மகளைக் கட்டியணைத்துத் தாய் அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

தூய்மைப் பணியாளர் துரையின் இந்த ஈடு இணையற்ற நேர்மையைத் திருவாரூர் நகர காவல்துறை வெகுவாகப் பாராட்டியது: துரைக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தனர். அவரது மனைவியையும் வரவழைத்து, அவர்களுக்குப் புத்தாடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தன்னைப் போன்ற ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வலியையுணர்ந்து, வறுமையிலும் நேர்மையாகச் செயல்பட்ட துரையின் செயலுக்குத் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!