வளைகுடா கடலில் 23000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவிப்பு... ஹார்முஸ் நீரிணை மூடல் எதிரொலியால் அவதி!
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திடீரென மூடியது. இந்த அறிவிப்பை மீறி சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வளைகுடா கடல் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் சூழ்நிலை காரணமாக அந்த நீரிணையை தவிர்த்து பல கப்பல்கள் வளைகுடா கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய கப்பல் கழகத்தின் ஏழு கப்பல்கள் உட்பட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முப்பத்தைந்து கப்பல்கள் அங்கு சிக்கியுள்ளன. அந்த கப்பல்களில் மட்டும் ஆயிரத்து எழுபத்து நான்கு இந்திய பணியாளர்கள் உள்ளனர்.
மேலும் வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் கப்பல்களில் மொத்தம் இருபத்தி மூன்று ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு மணிநேரத்திலும் கப்பல்களின் நிலைமை பற்றிய தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும் மிகவும் ஆபத்தான செங்கடல் வழியை இந்திய கப்பல்கள் பயன்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!