undefined

கொடூரம்... அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்!

 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஓர் ஓட்டலில் காதலன் - காதலிக்கு இடையே நடந்த வாக்குவாதம், கத்திக்குத்து மற்றும் கொலையில் முடிந்துள்ளது. தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பில் காதலி கத்தியால் குத்திய நிலையில், ஆத்திரமடைந்த காதலன் பதிலுக்கு காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் நிஷாத். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். விவாகரத்து நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது தான், அமித் நிஷாத்துடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமித் நிஷாத்தை அந்தப் பெண் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அமித் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், திடீரென அமித் நிஷாத்தின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியால் துடித்த அமித் நிஷாத், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அமித் நிஷாத்தை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவருக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!