கொடூரம்... 2 மாத குழந்தையின் வாயில் துணியைத் திணித்து எரித்த தாய்!
குழந்தைத் தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்ததால், 2 மாத குழந்தையின்வாயில் துணியைத் திணித்து அடுப்பில் எரித்து அதிர வைத்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே திண்டிகல் பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு மாத ஆண் குழந்தையை அதன் தாய் மம்தா எரித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், கட்டுமான பணிக்காக அப்பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த மம்தா, முதலில் குழந்தையின் வாயில் துணி வைத்து அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் குழந்தையை அடுப்பில் வைத்து எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மம்தாவை கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!