கொடூரம்... சிக்னலில் கார் மீது கவிழ்ந்து விழுந்த சரக்கு லாரி.. ஓட்டுநர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் - நைனித்தால் நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று மின்சார வாகனத்தின் மீது கவிழ்ந்து, விபத்திற்குள்ளனாதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராம்பூர் மாவட்ட மின்வாரிய அதிகாரியின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசு காரை, அதன் ஓட்டுநர் இன்று தனியாக ஓட்டிச் சென்றுள்ளார். ராம்பூர் - நைனித்தால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கியச் சந்திப்பில், சிவப்பு விளக்கு எரிந்ததால் கார் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. சிக்னல் விழுந்தவுடன், ஓட்டுநர் காரை வலதுபுறமாகத் திருப்ப முயன்றுள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு லாரி, காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளது. ஆனால், வேகக் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி, வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த கார் மீது அப்படியே கவிழ்ந்தது.
டன் கணக்கிலான எடையுள்ள லாரி கார் மீது கவிழ்ந்ததில், கார் முழுமையாக நசுங்கியது. காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கிச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த உள்ளூர் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றி, காரை வெட்டி எடுத்து ஓட்டுநரின் உடலை மீட்டனர். உயிரிழந்த ஓட்டுநரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிகப்படியான பாரம் ஏற்றி வந்ததே லாரி கவிழ்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!