அடுக்குமாடி குடியிருப்பில் கோர சம்பவம்...  மின்கசிவால்  3 குழந்தைகள் உட்பட  9 பேர் உடல் கருகி   பலி! 

 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரின் சுவர்ண பாக் காலனி பகுதியில் உள்ள ஒரு இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில், இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள மின்சார மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின் மீட்டரில் பற்றிய தீ, அடுத்த சில நிமிடங்களில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றிற்கும் பரவியது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில், மாடியில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த மீட்புப் பணியின் போது 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புகையினால் மூச்சுத்திணறி மயக்கமடைந்த நிலையில், தீயில் கருகி பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்திற்கு வேறு ஏதேனும் சதிச் செயல்கள் காரணமா அல்லது முற்றிலும் விபத்தா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!