டெல்டா மாவட்டங்களில் பயங்கர சத்தம்… கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் பீதி!
காவிரி வடிநில டெல்டா மாவட்டங்களில் சில வாரங்களாக காலை நேரங்களில் பயங்கர வெடிச் சத்தம் போன்ற ஒலி கேட்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த சத்தத்தால் குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பீதியடைந்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
முன்னதாக கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இந்த சத்தம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளிலும் தினமும் இந்த சத்தம் கேட்கப்படுவதாக மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தஞ்சை விமானப்படை ஜெட் விமானங்கள் பறப்பதால் அல்லது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நில அதிர்வு சோதனை காரணமாக இந்த சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த சத்தத்திற்கான உண்மையான காரணத்தை அரசு விளக்கி, மக்கள் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!