undefined

'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப்பில் பயங்கரம்... ஆபாச வீடியோவைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்!

 

திருமணம் செய்துக் கொள்ளாமல் ஆண் நண்பர் ஒருவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண்ணை, ஆபாசமாக செல்போனில் வீடியோக்கள் பதிவு செய்து, அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, மீண்டும் தன்னுடன் வருமாறு வற்புறுத்திய வாலிபரை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சிராஜூல் இஸ்லாம் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிராஜூல் இஸ்லாமின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்தப் பெண் அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசிக்கத் தொடங்கினார்.

பிரிந்து சென்ற பெண்ணை சிராஜூல் இஸ்லாம் விடாமல் துரத்தியுள்ளார். அடிக்கடி அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது எடுத்த தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மிரட்டல் விடுத்தது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Women Harassment Act) கீழ் வழக்குப்பதிவு செய்து சிராஜூல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிராஜூல் இஸ்லாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!