undefined

  பகீர் சிசிடிவி காட்சிகள்... பட்டப்பகலில் பயங்கரம்...  கடைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு!  

 

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில்  கல்லூரி சாலை பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் . இந்த கடை உரிமையாளர் சஞ்சீவ் குமார் ஷா அல்லது குட்டு சஹா, முகமூடி அணிந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.  இச்சம்பவத்தின்போது கடையில் தனியாக இருந்த சஞ்சீவிடம் குற்றவாளிகள் முதலில் பெயர் கேட்டனர்.  அவ பதிலளித்ததும்  நேராக மார்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நகர காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் குப்தா, ஜிராவாடி காவல் நிலைய பொறுப்பாளர் சஷி சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி, குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், சஞ்சீவ் குடும்பத்தில் மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் துயரத்தில் மூழ்கினர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?