ஒடிசாவில் கொடூரம்... மனைவி, மருமகள், பேத்தி என 3 பேரை வெட்டிக் கொன்ற கணவன்!

 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியாக ஒடிசா மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, மருமகள் மற்றும் பேத்தி என 3 பேரையையும் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் தேவ்கர் மாவட்டத்தில் 52 வயதான ரமேஷ் கரியா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவர், தனது மனைவி, மருமகள் மற்றும் 6 வயது பேத்தியை கனமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.  உயிருக்கு பயந்து மருமகளின் அறைக்குள் ஓடிய மனைவியையும் அவர் துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் தீரன், தாய், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள ரமேஷ் கரியாவை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!