undefined

தமிழகத்தில் பதறவைக்கும் கொடுமை... சிறுவர்களுக்குக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கும் இளைஞர்!

 

தமிழகத்தின் அமைதியான மாவட்டங்களில் ஒன்றான கடலூரில், பிஞ்சுச் சிறுவர்களுக்குக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த மிக மோசமானச் சம்பவம் அரங்கேறி, ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அம்மன் கோவில் கிராமத்தில் இந்த விபரீதச் சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்ற இளைஞர், விவரம் தெரியாத மூன்று சிறுவர்களைப் பிடித்து அவர்களுக்குக் கட்டாயப்படுத்தி மதுவைக் கொடுத்துள்ளார்.

அந்தச் சிறுவர்கள் மதுவைக் குடிக்க மறுத்து அடம் பிடித்தும், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து மது அருந்த வைத்த முகுந்தன், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்தத் திடுக்கிடும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களைச் சீரழிக்கும் வகையில் நடந்த இந்த மனிதாபிமானமற்றச் செயலைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்புச் சட்டத்தைச் சார்ந்த நன்னடத்தை அலுவலர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கித் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்தது அதே கிராமத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் முகுந்தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்க முயன்ற இந்த இளைஞரின் செயல் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!