தஞ்சையில் கொடூரம்... ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தையின் சடலம்!
தஞ்சாவூரில் கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தில் ஆற்றின் கரையில் ஒதுங்கிய குழந்தையின் உடலைக் கண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இளங்கார்குடி கிராமப்பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரியும் இடத்தில் பழைய கதவணை ஒன்று உள்ளது. நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றில் ஏதோ ஒன்று மிதந்து வருவதைக் கவனித்துள்ளனர்.
அருகில் சென்று பார்த்தபோது, அது ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆற்றில் மிதந்து கரை ஒதுங்கிய குழந்தையின் உடலை மீட்டனர். அது பிறந்து 1 அல்லது 2 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் (VAO) அளித்த புகாரின் அடிப்படையில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இக்குழந்தையின் தாய் யார்? கள்ளத்தொடர்பு காரணமாகக் குழந்தை ஆற்றில் வீசப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என நினைத்து தவறுதலாக ஆண் குழந்தையை வீசினார்களா? அல்லது பிரசவத்தின் போதே குழந்தை இறந்துவிட்டதால் பயத்தில் ஆற்றில் வீசிச் சென்றார்களா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களின் விபரங்களைச் சேகரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!