குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு… தமிழக அரசு புதிய விதிமுறைகள்!
குதிரை சவாரி மற்றும் குதிரை இன விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குதிரை, கழுதைகளை பயன்படுத்துவோர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமண நிகழ்ச்சிகளில் பொருட்களை சுமக்க பயன்படுத்துவது போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும். குதிரைகள் மீது அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு முறையாக இல்லாவிட்டால் குதிரைகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குதிரை வளர்ப்பு நிறுவனங்களும், உரிமையாளர்களும் தங்கள் குதிரைகளை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். உரிமையாளர்கள் மீது எந்த குற்ற வழக்குகளும் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!