வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடக்கம்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டை அருகே உள்ள கோல்ப் மைதானத்தில் வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது. மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ண ராவ் விழாவை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழா தொடக்கத்தையடுத்து, அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ண ராவ் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்தார். சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்றரை மணி நேரம் அவர் வானில் பயணித்தார். கோல்கொண்டா கோல்ப் மைதானத்தில் தொடங்கி அப்பாஜிகுடா பகுதி வரை பயணம் செய்து, சுற்றுப்பகுதியை வான்வழியாக பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தார். இந்த பலூன் திருவிழா தெலுங்கானா சுற்றுலாவுக்கு புதிய அடையாளமாக இருக்கும் என்றார். மாநில சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 15 சர்வதேச தர வெப்பக்காற்று பலூன்கள் பங்கேற்றுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!