undefined

 வேலையை  விட  முடியாது... மறுத்த மனைவியை உடல் முழுவதும் கடித்தே கொலை செய்து கணவனும் தற்கொலை... கொடூரம்!  

 
 

பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், தனது மனைவி வத்சலாவை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்ததால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் வத்சலாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது.

மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை மற்றும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!