இனி 2 மாச வாடகை தான் அட்வான்ஸ்... ஹவுஸ் ஓனர்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
வீட்டிற்கு வாடகைக்கு குடியேறும் அனைவரும், வீட்டு உரிமையாளர்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய புதிய விதிமுறைகள் 2025 வாடகைச் சட்டத்தின் மூலம் அமலுக்கு வந்துள்ளன. இனி வெறும் ஸ்டாம்ப் பேப்பர் ஒப்பந்தம் போதாது; கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் மாநில அரசின் இணையதளத்தில் டிஜிட்டல் முத்திரையுடன் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும். இதை தவிர்ப்போர் மீது ரூ.5,000 முதல் அபராதம் விதிக்கப்படும்.
வாடகை உயர்வு இனி ஒப்பந்தம் தொடங்கி 12 மாதங்களுக்குப் பிறகே வாடகையை உயர்த்த முடியும்; அதற்கும் குறைந்தது 90 நாள் முன்னறிவிப்பு கட்டாயம். குடியிருப்பு வீடுகளுக்கு இரண்டு மாத வாடகைக்கு மேல் வைப்புத் தொகை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாய உத்தரவு இல்லாமல் வாடகையாளரை வெளியேற்ற முடியாது என்பதையும் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
வாடகையாளர் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வீட்டைப் பார்வையிட 24 மணி நேர முன் அறிவிப்பு அவசியம். போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் துண்டித்து மிரட்டுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பழுதுகளை 30 நாட்களுக்குள் சரிசெய்யாதால், வாடகையாளர்கள் தாங்களே பழுது பார்த்து செலவை வாடகையில் கழிக்கலாம். மேலும், வாடகைத் தகராறுகளை 60 நாட்களுக்குள் தீர்க்க சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!