இல்லத்தரசிகளே உஷார்.. இதைச் சாப்பிட்டா கேன்சர் வருமாம்! உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

 

பாஸ்ட் புட் காலத்தில் வாழ்கிறோம். நாம், குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று பார்த்து பார்த்து சமைத்து தரும் பல பொருட்களில் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக உணவு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பாஸ்ட் புட் உணவகங்களில் உண்பதைத் தவிர்த்து விடுங்க. அசைவ உணவு வகைகள் தான் என்றில்லாமல், சைவமாகவே இருந்தாலும் முழுவதுமாக தவிர்த்து விடுங்க. அது நூடுல்ஸாக இருந்தாலும் சரி ப்ரைட் ரைஸாக இருந்தாலும் சரி. சிக்கன் பிரியாணிகளில் எலி தலையும், மட்டன் பிரியாணிகளில் பூனைக் கறியுமாக கலந்து விடுகிற கொடுமைகளை வாரத்திற்கொரு முறையாவது செய்தி தாள்களில் படித்து கொண்டிருக்கிறோம்.

பிரியாணி சாப்பிட்டு விட்டோ, பரோட்டா சாப்பிட்டு விட்டோ நன்றாக தூங்கச் சென்றவர் அடுத்த நாள் காலையில் படுக்கையிலேயே பிணமாக கிடந்தார் என்று செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. ஷவர்மாக்களில் கெட்டுப் போன இறைச்சிகளைப் பயன்படுத்தி, கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் குறைந்தது அரை டஜன் உயிர்களையாவது பறித்திருப்பார்கள். உணவகங்கள் என்றில்லாமல் இப்போது குழந்தைகளைக் கவர்வதிலும் களமிறங்கி இருக்கிறார்கள். விஷயம் இது தான்.. செகலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக உணவுத்துறை அதிகாரி சதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.

பலருக்கும் பொரித்த அப்பளங்களைச் சாப்பிடுவதில் அலாதி பிரியம். இன்னும் சிலருக்கு அப்பளம் இல்லாமல் சோறே இறங்காது. அதிலும் தங்களுக்கு பிடித்த உணவில் அப்பளத்தை தொட்டு சாப்பிட பலரும் விரும்புவார்கள். 

இப்போதைய குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வண்ண மயமான வற்றல்கள், வடகங்கள், குடல் அப்பளங்கள் வரத் தொடங்கின. வெண்டைக்காய், நட்சத்திரம், சக்கரம், சதுரம், ஹார்ட்டின் வடிவம், உருளை வடிவம் என விதவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் வெளிவரத் தொடங்கி விட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அப்பளங்களை விரும்பி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். 

குழந்தைகளைக் கவர கலர் கலராக விற்கப்படும் இந்த வகையான அப்பளங்கள், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு அல்சர், கேன்சர் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரி சதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.

அப்படி அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டால் கலர் இல்லாத அப்பளமாக வாங்கி சாப்பிடலாம். மேலும், அஜினோ மோட்டோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். சுவைக்காக இந்த வகையான அப்பளங்களில் அஜினோமோட்டோவும் சேர்கிறார்கள்.  சமீபத்தில் மதுரை, விருதுநகர் போன்ற இடங்களில் உள்ள அப்பள குடோன்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, அனுமதிக்கபடாத நிறமிகளைச் சேர்த்ததாக கூறி 850 மூட்டை கலர் அப்பளங்களை கைப்பற்றி, சீல் வைத்துள்ளனர். உஷாரா இருங்க. ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!