இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! 4 நாட்களில் ரூ1800 உயர்வு!!  சவரனுக்கு ரூ43000ஐ கடந்த தங்கம்!!

 

இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520அதிகரித்துள்ளது.கடந்த  4 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1880 ஏறியுள்ளது. மார்ச் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதன்படி மார்ச் 10ம் தேதி  தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டது .  மார்ச் 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து  ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் தொடங்கிய தங்கம் மார்க்கெட்டில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.  நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,325க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று  தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது . இன்றைய விலை நிலவரப்படி  தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கும், சவரனுக்கு ரூ.520அதிகரித்து  ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,880 அளவுக்கு அதிகரித்து  நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் சவரன் 43000க்கும் அதிகரித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!