நடிகை குஷ்புவின் உடல் நிலை எப்படி உள்ளது? - வெளியான முக்கிய தகவல் !

 

பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான , அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து கட்சி பணிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தில் பரவி பாஜக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உங்கள் உடல் சோர்வாக இருந்தால் தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள், என்று அறிவுரை கூறியிருந்தார். குஷ்பு நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் தற்போது குஷ்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டேன். ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்குமாறும், பயணங்களை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நான் நலம் பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி. இந்த அளவுக்கு அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!