12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?

 

மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்விற்கான ஆயத்தப் பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.பள்ளிகள் geapp.tnschools.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐப் பயன்படுத்திப் பெயர் பட்டியலைத் தரவிறக்கம் செய்ய வேண்டும்.

11-ம் வகுப்புப் பாடங்களில் தோல்வியடைந்து (Arrear), மீண்டும் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை வரும் ஜனவரி 24-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்தவுடன், மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி மற்றும் அவர்கள் தேர்வு எழுதும் பாடங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளில் தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை இடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!