நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இலவச தடுப்பூசி…!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான இலவச தடுப்பூசி திட்டத்தை ஒன்றிய அரசு நாடு முழுவதும் அறிவித்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். ஒருமுறை செலுத்தப்படும் ‘கர்டாசில்’ தடுப்பூசியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் தமிழ்நாடு அரசு 2025 பட்ஜெட்டில் ரூ.36 கோடி ஒதுக்கி, 14 வயதுக்குள் உள்ள 3 லட்சத்து 38 ஆயிரம் பெண்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அறிவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பெண்களின் உடல்நல பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் நோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பூசி செலுத்தினால் இந்த நோயை தடுப்பது சாத்தியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!