undefined

இந்திய வம்சாவளி மனித உரிமைகள்  வழக்கறிஞர் ரவி மாடசாமி மறைவு!

 
 

சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரவி மாடசாமி (56) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அவர், மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது மறைவு சட்ட மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண தண்டனைக்கு எதிராகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் பல முக்கிய வழக்குகளில் அவர் வாதாடினார். மனித உரிமைகள் தொடர்பான அவரது செயல்பாடுகளை பாராட்டி சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் அங்கீகாரம் வழங்கியது. 1969-ம் ஆண்டு பிறந்த ரவி மாடசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அவரது மறைவுக்கு சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டத் துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனித உரிமை போராட்டங்களில் அவர் விட்டுச் சென்ற தடம் நீண்ட காலம் நினைவில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!