undefined

நாளை உண்ணாவிரதப் போராட்டம்.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 4 முக்கிய நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!

 

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், நாளை (டிசம்பர் 13) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. ஐகோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அரசு அனுமதி மறுத்ததையடுத்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தீபத்தூணுக்கும் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் இடையே குறைந்த இடைவெளியே இருப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இருப்பினும், அந்தத் திருநாளில் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது வெறும் சர்வே கல் (நில அளவை கல்) என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியது, இந்த விவகாரத்தின் சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

ஐகோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணையில் உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தச் சூழலில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் மக்கள் சார்பில் டிசம்பர் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் ஊர் மக்கள் சார்பாக இரா. பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், பின்வரும் நிபந்தனைகளையும் விதித்தார்:

காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். போராட்டத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். போராட்டத்தின் போது அரசியல் பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!