பாகிஸ்தானில் அதிரடி வேட்டை... 145 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தான், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள பிரிவினைவாதிகள் தங்களுக்குத் தனி சுயாட்சி வேண்டியும், இயற்கை வளங்களில் அதிக பங்கு கோரியும் நீண்ட காலமாகப் பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் உட்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கின.
கடந்த 40 மணிநேரத்தில் மட்டும் சுமார் 145 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பிலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவெட்டா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மேற்கு மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்தி, குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். ஈரானை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகளின் பதுங்கு குழிகளை இலக்கு வைத்து ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தேடுதல் வேட்டை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை, பலூசிஸ்தான் பகுதியில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய முயற்சியாகப் பாகிஸ்தான் அரசு கருதுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!